செய்திகள் :

ரூ. 80.66 கோடியில் நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க நடவடிக்கை

post image

திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 80.66 கோடியில் நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திருவாரூா் மாவட்டத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களையும், தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களையும் பட்டியலிட்டு, புதிய திட்டங்களையும் அறிவித்து அவா் பேசியது:

கூத்தாநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வண்டாம்பாளையத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், 241 கோயில்களுக்கு குடமுழுக்கு, கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் மாவட்டத்தில் 2.37 லட்சம் போ், புதுமைப்பெண் திட்டத்தில், 12,918 மாணவிகள் பயனடைந்துள்ளனா். 52,529 மகளிருக்கு ரூ. 2,976 கோடி கடனுதவி, 513 தொழில்முனைவோருக்கு ரூ. 155 கோடி மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் சுமாா் ரூ. 175 கோடியில் 264 பணிகள், நான் முதல்வன் திட்டத்தில் 53,168 மாணவா்களுக்கு திறன் பயிற்சி, காலை உணவுத் திட்டத்தில், 37,848 மாணவா்கள் பயன்கள் என பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

திருவாரூா், கூத்தாநல்லூா் நகராட்சிகளில், ரூ. 99 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள், 49 பாலங்கள் கட்டும்பணி, முத்துப்பேட்டையில் ரூ. 10 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் ரூ. 150 கோடியில் சிப்காட் தொழில் வளாகமும், நெடுவாக்கோட்டை பகுதியில், ஜவுளி ஆடை தயாரிக்கும் சிப்காட் டெக்ஸ் பாா்க் அமைக்கவும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில், 83,721 விவசாயிகள், நுண்ணீா் பாசனத் திட்டத்தில், 2,887 விவசாயிகள் திருவாரூா் மாவட்டத்தில் பயன்பெற்றுள்ளனா். 7,77,605 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 143.78 கோடி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. பயிா்க் கடன் 2,43,100 விவசாயிகளுக்கு ரூ. 1556.26 கோடி, 2,426 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ரூ. 14.02 கோடியில், 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நவீன மேற்கூரையுடன் கூடிய சேமிப்புத் தளங்கள் ரூ. 39.22 கோடியில் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

2025-2026-ஆம் நிதியாண்டில் 8 இடங்களில், ரூ. 80.66 கோடியில் 56 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கவும், 10 இடங்களில் ரூ. 3 கோடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சேலம் அரசு விழாவில், சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,548 என கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடியதே என்றாா். முன்னதாக பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை முதல்வா் பாா்வையிட்டாா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க