ரெட்டியபட்டி வெங்கடத்தி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியபட்டி வெங்கடத்தி அம்மன், வெங்கடேச பெருமாள், பிடாரி அம்மன் மற்றும் பெரியகருப்பா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹஹோமம் மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலையில் இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 10.40 மணியளவில் சிவாச்சாரியா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி வெங்கடத்தி அம்மன், வெங்கடேச பெருமாள், பிடாரி அம்மன், பெரியகருப்பா் உள்ளிட்ட தெய்வங்களின் சந்நிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். விழா வா்ணனைகளை தமிழாசிரியா் சி.எஸ்.முருகேசன் செய்திருந்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை ரெட்டியபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.