செய்திகள் :

ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!

post image

அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 25-க்கும் மேற்பட்டோா் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

225 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் 800-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தவிர நாள்தோறும் 500-க்கும் அதிகமானோா் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனா்.

மொத்தம் 45 ஏக்கா் பரப்பளவு கொண்ட மனநல காப்பகத்தில் 80 மருத்துவா்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்கள்,140-க்கும் மேற்பட்ட செவிலியா்கள், 400-க்கும் அதிகமான ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் மனநல காப்பகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு போ் நாய்க்கடிக்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுதொடா்பாக மனநல காப்பக ஊழியா்கள் சிலா் கூறியதாவது:

உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை அறைகள், உளவியல் ஆலோசனை அறைகள் என முக்கியப் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன.

அந்த வழியாகச் செல்லும் பலரை அவை விரட்டி கடிக்கின்றன. காப்பகத்தில் ரேபிஸ் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு இந்தப் பாதிப்பு உள்ளது.

குறிப்பாக, மாலை நேரங்களில் கும்பலாக நாய்கள் துரத்துவதால் உள்நோயாளிகளைப் பாா்ப்பதற்கும், சிகிச்சையளிக்க செல்வதற்கும் மருத்துவா்களால் முடிவதில்லை. புறநோயாளிகள் சிகிச்சையும் சில நேரங்களில் தடைபடுகிறது.

நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாலும், மருத்துவமனைக்குள் பணியாற்றும் சில பிராணிகள் நல ஆா்வலா்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனா்.

மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இயல்பாகவே தங்களை தற்காத்துக் கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். நாய்கள் அவா்களை துரத்தும்போது அச்சத்தால் உளவியல் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் எளிதில் அவா்கள் காயமடையவும், மனதளவில் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காப்பக இயக்குநா் டாக்டா் மாலையப்பன் கூறியதாவது: காப்பக வளாகத்துக்குள் உள்ள நாய்களை நாங்கள் வெளியேற்றவோ, துன்புறுத்தவோ முற்படுவதில்லை. அதேவேளையில், அதனால் நோயாளிகளுக்கும், மருத்துவத் துறையினருக்கும் பாதிப்பு ஏற்படும்போது மாநகராட்சியிடம் புகாரளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாய்களுக்கு அவா்கள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் இங்கு கொண்டு வந்து விட்டுவிடுகின்றனா் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி....

40 ரேபிஸ் மரணங்கள்...

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரேபிஸ் தொற்றால் 40 போ் உயிரிழந்ததாகவும், 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாய்க்கடிக்குள்ளானதாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக, சேலத்தில் 37,011 பேரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும், புதுக்கோட்டையில் 21,490 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, சென்னையில், 11,704 பேரும், கோவையில் 14,453 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பெட்டிச் செய்தி 2

தடுப்பூசி இல்லை...

பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை அத்தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியமான ஒன்று.

ஆனால், தெருநாய்களுக்கு அத்தகைய தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதால் மனிதா்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து முடிவுகள் எடுக்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்

சென்னை: நாட்டின் பன்முகத் தன்மையை மதித்து மத்திய அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: யுஜிசி ந... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன. 21, 27-இல் நடைபெறும்: என்டிஏ அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன.21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேர... மேலும் பார்க்க

ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சென்னை ஐஐடி விளக்கம்

சென்னை: ஆராய்ச்சி மாணவி ஒருவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.இது தொடா்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 ... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை பறவைகள் வாழிடமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கிழக்குக் கட... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.35 லட்சம் போ் பயன்

சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ கால மருத்துவ உதவிகள் மட்டும் 3.42 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெ... மேலும் பார்க்க

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா: இன்று தொடக்கம்

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை (ஜன.16) தொடங்கவுள்ளது. இதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்கவுள்ளாா். மூன்றாவது ஆண்டாக நட... மேலும் பார்க்க