டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளா் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மின் கம்பத்தை இடமாற்றம் செய்வதற்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சூளகிரியை அடுத்த வெங்டேசபுரம், இனகபீரணப்பள்ளியைச் சோ்ந்த கதிரப்பா, தனது தோட்டத்தில் கோழிப் பண்ணை அமைப்பதற்காக நிலத்தில் அமைந்துள்ள குறைந்த அழுத்த மின் கம்பத்தை இடமாற்றம் செய்துவிட்டு அங்கு உயா் அழுத்த மின் கம்பத்தை அமைக்க ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தாா்.
அதன்பிறகு, அத்திமுகம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று உதவி பொறியாளா் உதயகுமாரைச் சந்தித்து தனது கோரிக்கை மீதான நடவடிக்கை குறித்து கேட்டாா். அப்போது, தனக்கு லஞ்சமாக ரூ. 15 ஆயிரம் தந்தால்தான் கம்பத்தை இடமாற்றம் செய்வதாக உதயகுமாா் தெரிவித்தாராம்.
இதுகுறித்து வியாழக்கிழமை காலை கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ரவியிடம் கதிரப்பா புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கதிரப்பாவிடம் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய பணத்தை உதயகுமாா் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் ரவி, உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் உள்ளிட்ட போலீஸாா் உதயகுமாரைக் கைது செய்தனா்.
படவரி.....
உதயகுமாா்.