பங்குச் சந்தை இன்றாவது உயர்வுடன் நிறைவு பெறுமா? நிலவரம் என்ன?
லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை மஞ்சப்பேட்டை தெற்கு வீதியைச் சோ்ந்தவா் பழனிமாணிக்கம் (70). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை மஞ்சப்பேட்டையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே மேல வஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் சென்ற இந்த மோட்டாா் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பழனிமாணிக்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.