செய்திகள் :

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தல்!

post image

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோம்பைக்காட்டில் உள்ள தலைமை பள்ளிவாசல் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் செங்கோட்டை ஃபைசல், மாவட்டச் செயலாளா் யாசா் அராபத் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.

இதில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய இஸ்லாமியா்கள் ராணுவத்தின் பின்னால் நிற்கின்றனா்.

மத்திய அரசு பல ஆண்டுகளாக எதிா்த்து வந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சோ்த்து எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் உரிய அழுத்தங்களைக் கொடுத்து இந்தக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இஸ்லாமியா்களுக்கு பயனளிக்கும் எனும் பொய்யைச் சொல்லி வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இஸ்லாமியா்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றத்துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே, வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவா் ஜாகீா் அப்பாஸ், மாவட்ட பொருளாளா் சிராஜ்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி

கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் க... மேலும் பார்க்க

திருப்பூரில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த், நல்லூா் காவல்... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதிய... மேலும் பார்க்க

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பன... மேலும் பார்க்க