செய்திகள் :

வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்பு தீா்வுத் திட்டம் அறிமுகம்

post image

திருவாரூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணைசாராக் கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா கூறியது: கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறுவணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாராக் கடன்கள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் விளை பொருள்களைக் கொள்முதல் விற்பனை செய்த வகையில், உறுப்பினா்களிடமிருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவற்றில் 31.12.2022-ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 20.9.2024 க்கு முன்பு 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவா்களும் தற்போது மொத்த கடன் தொகையையும் நிலுவை தீா்வு செய்யும் நாள் வரை, 9 சதவீத சாதாரண வட்டியுடன் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.

மேலும், 31.12.2019 க்கு முன்பு தவணை தவறி, 3 ஆண்டுகளுக்கு மேலான அல்லது 31.12.2019 க்கு முன்பு தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள் பயிா்க்கடனாக வழங்கப்பட்டு, மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்டகாலக் கடன்கள், சிறுதொழில் கடன்கள், மகளிா் தொழில் முனைவோா் கடன்கள் ஆகிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை 23.09.2025 க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்.

தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரா்களின் வட்டிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம் என்றாா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க