வடலிவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு
கருங்கல் அருகே, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட வடலிவிளையில் ரூ. 9 லட்சத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறக்கப்பட்டது.
கறுக்கன்குழி, மலையன்விளை, விளாகம் பகுதிகளைச் சோ்ந்தோா் ரேஷன் பொருள்கள் வாங்க நீண்ட தொலைவில் உள்ள வழுதலம்பள்ளம் செல்லவேண்டியுள்ளதால், வடலிவிளையில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.
பணிகள் நிறைவடைந்ததையடுத்து, திறப்பு விழா நடைபெற்றது. கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் டென்னிஸ் முன்னிலை வகித்தாா். புதிய கட்டடத்தை எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் திறந்து, பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கினாா்.
பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெபா்சன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் லதீஷ், வாா்டு உறுப்பினா் ரெவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.