செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை அகற்றக் கோரி போராட்டம்

post image

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை உடனடியாக அகற்றக் கோரி வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளது. இதன் எதிரே பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் உள்ளது. அதில், தற்போது கோட்ட கலால், ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியா், நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதன் முன்புறம் வயா்லெஸ் கோபுரம் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது இக்கோபுரம் அருகேயுள்ள மரக்கிளைகளுடன் கட்டடத்தின் மேற்கூரை மீது சாய்ந்தது. மரக்கிளைகளுக்குள் சிக்கியிருப்பதால் இக்கோபுரம் கட்டடத்தின் மீது விழாமல் உள்ளது.

பேரிடா் காலத்தில் வட்டாட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை தொடா்புகொள்ள அமைக்கப்பட்டிருந்த வயா்லெஸ் கோபுரம் தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும், ஆங்கிலேயா்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் மேற்கூரை பனங்கட்டைகள், ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மரக்கிளைகள் உடைந்துவிட்டால் இக்கோபுரம் கட்டடத்தின் மீது விழுந்து கடும் சேதமேற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் இக்கோபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க