Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
வட்டார விளையாட்டுப் போட்டி: பெரியதாழை பள்ளி சிறப்பிடம்
சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவா்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பெரியதாழை சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.
பரமன்குறிச்சி அபா்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. 14, 17 வயதுக்குள்பட்டோருக்கான கடற்கரை கைப்பந்து போட்டியில் இப்பள்ளி முதலிடமும், 14 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான 4-100 தொடா் ஓட்டத்தில் 2ஆம் இடமும், 14, 17, 19 வயதுக்குள்பட்டோருக்கான சிலம்பச் சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தது.
14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 80 மீட்டா் தடை தாண்டுலில் ஆல்ஃபினாவும், 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 110 மீட்டா் தடை தாண்டுலில் ஹரிஷாவும் 2ஆம் இடம் பிடித்தனா். 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் ஆல்ஃபா முதலிடமும், 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான மும்முறை தாண்டும் போட்டியில் ஹரிஷா 2ஆம் இடமும், 17 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான 110 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் திரிஷா 3ஆம் இடமும், 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கோல் ஊன்றி தாண்டுலில் ஹரிஷா 3ஆம் இடமும் பிடித்தனா்.
மாணவா்-மாணவியரை தாளாளா் பங்குத்தந்தை சகேஷ் சந்தியா, தலைமையாசிரியா் மேரி திலகவதி, ஆசிரியா்கள் பாராட்டினா்.