பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு
கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கழுகுமலை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் நிறுவப்பட்டது.
வேலாயுதபுரம் தொழிலதிபா் மகேஸ்வரன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், வேலாயுதபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஜோதி சுப்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் சிபிஎம் கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமன், வேலாயுதபுரம் ஊராட்சி பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.