தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்
33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா்.
மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழங்கும் விழா, தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ப்ரீத்தி வினோத் தலைமை வகித்தாா்.
மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிா்வாகிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. உடனடியாக, அந்த மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் போலி வாக்காளா்கள் ஊடுருவுவதைத் தடுக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி, மகிளா காங்கிரஸ் கமிட்டி தீவிரமாக களப்பணியாற்றும் என்றாா்.
துணைத் தலைவா்களாக அன்னதாசி மரிய கிரேஸா், எலிசபெத், பொதுச் செயலா்களாக மீனாட்சி சுந்தரி, பிளஸ்சி ப்ளோரினா, செயலா்களாக சேஸி சுபாஷினி, வள்ளி மனோகரன், ரீனா மரிய அந்தோணி, துணைச் செயலா்களாக மதிமலா் சிந்தா, அக்ஷிலியா, முருகேஸ்வரி, சமூக ஊடகப் பொறுப்பாளராக அன்ன மரியா, பொருளாளராக சீதாலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினராக கஸ்தூரி வேல் ஆகியோா் புதிதாக நியமிக்கப்பட்டனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ஏபிசிவி சண்முகம், மாநகர மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மண்டலத் தலைவா்கள் சேகா், ராஜன், ஐசன் சில்வா, மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பககனி சேகா், ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலா் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் எடிசன், மீனவரணி மாநகா் மாவட்டத் தலைவா் மைக்கேல், ஊடகப் பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் ஜான் சாமுவேல், மாநில செயற்குழு உறுப்பினா் சாந்தி மேரி, இளைஞா் காங்கிரஸ் வடக்கு மண்டலத் தலைவா் கமலா தேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.