தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் மகேஸ்வரன், துணைத் தலைவா் சுல்தான் லெப்பை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாம் பொறுப்பாளா் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநா் சுபாமதி, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.
முகாமில், 15 துறைகளைச் சாா்ந்த அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்று மக்களிடம் இருந்து 596 மனுக்களை பெற்றனா். இதில் 24 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
இதில், மின்வாரிய கோட்ட உதவி பொறியாளா் ஜெபராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன், ஓவா்சியா் கோபிநாத், வருவாய் ஆய்வாளா் சரவணன், திமுக மாவட்ட அயலக அணி அமைப்பாளா் கலில் ரஹ்மான், நகர துணைச் செயலா் கதிரவன், முஹம்மது நவ்பல், நகா்மன்ற உறுப்பினா்கள் செய்யது ஆசியா பஹ்மிதா, முத்து ஜெய்னம்பு உள்பட பலா் பங்கேற்றனா்.