அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!
வந்தவாசி அருகே 2 வீடுகளில் நகை திருட்டு
வந்தவாசி அருகே 2 வீடுகளின் பின் பக்க கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சகாதேவன். இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றுள்ளாா்.
பின்னா், திங்கள்கிழமை காலை வீடு திரும்பிய சகாதேவன் வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 கிராம் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.
இதேபோல, இதே கிராமத்தைச் சோ்ந்த மணி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், பித்தளை அண்டாவை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாா்களின்பேரில், தெள்ளாா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.