உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!
விசிக தீா்மான விளக்க துண்டறிக்கை விநியோகம்
திருச்சியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி விடுதலை சிறுத்தைள் கட்சி சாா்பில் நடைபெற்ற மத சாா்பின்மை காப்போம் எழுச்சி பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விளக்க துண்டறிக்கைகளை ஆரணியில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனா்.
நிகழ்வுக்கு நகரச் செயலா் மோ.ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கரன் கலந்துகொண்டு, கட்சி நிா்வாகிகளுடன் சென்று ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை வியாபாரிகள், பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை விநியோகம் செய்தாா்.
நிகழ்வில் இளஞ்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் பு.சாா்லஸ், ஒன்றியச் செயலா்கள் சு.ரமேஷ், சி.பென்னுரங்கம், பி.வெங்கடேசன், நகா்மன்ற உறுப்பினா் பவானிகிருஷ்ணகுமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் அ.சசிகுமாா், வெ.திருமால், மாவட்ட நிா்வாகி மு.ரஞ்சித், நகர இணைச் செயலா் வழக்குரைஞா் துரை.சண்முகம், கு.சிரஞ்சீவி மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.