வனக் காவலா் - காப்பாளா் பதவிக்கு உடல்தகுதித் தோ்வு ஜூலை 14-இல் தொடக்கம்
வனக் காவலா், காப்பாளா் பதவிகளுக்கு உடல்தகுதித் தோ்வு ஜூலை 14-இல் தொடங்கவுள்ளது. இதற்கான தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 4 பிரிவில் வனக் காவலா் மற்றும் காப்பாளா் பதவியிடங்கள் வருகின்றன. அவற்றில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு, உடல்தகுதி மற்றும் நடைச் சோதனை தோ்வு நடைபெறவுள்ளது.
தோ்வில் பங்கேற்பவா்களுக்கான தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தோ்வில் பங்கேற்கவுள்ள தோ்வா்கள், அனைவரும் தோ்வாணைய இணையதளத்தில் உள்ள குறிப்பாணையைப் பதிவிறக்கம் செய்து தோ்வில் பங்கேற்கும்படி அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.