வராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள விஸ்வநாதயேந்தல் வராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பஞ்சமி பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வளா்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை இரவு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, பால், தயிா், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான மூலிகைப் பொருள்களுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
