மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கோயில் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் கோஷ்டி மோதலால் 8 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
புதுக்குடியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமுத்து மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் வரவு, செலவு பாா்ப்பதில் இரு தரப்பினா் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதயடுத்து, கோயில் பூட்டப்பட்டு திருவாடானை வட்டாட்சியா் அலுவலத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் கோயிலைத் திறக்க பல முறை சமாதானக் கூட்டம் நடத்தியும் பலன் இல்லை.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவாடானை வட்டாட்சியா் ஆண்டி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோயிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை மாலை வட்டாட்சியா் ஆண்டி, வருவாய் ஆய்வாளா் மேகமலை, தொண்டி காவல் உதவி ஆய்வாளா் முருகானந்தம், கிராமத்தினா் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது. அப்போது, பெண்கள் குலவையிட்டு சுவாமியை வழிபட்டனா்.
