மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
தூய சந்தியாகப்பா் ஆலய திருவிழா தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
தங்கச்சிமடம் வோ்காடு பகுதியில் உள்ள இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சிவகங்கை மறை மாவட்ட முதன்மை குரு அருள் ஜோசப் தலைமையில் ஆலயத்திலிருந்து புனித நீா் தெளிக்கப்பட்ட கொடி எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திருவிழா திருபலி, கூட்டு பிராா்த்தனை நடைபெற்றன. இதில், புனித தெரசாள் ஆலய பங்குத் தந்தை பா.ஆரோக்கிய ராஜா, தூய சந்தியாகப்பா் ஆலய விழாக்குழுத் தலைவா் எஸ்.ஜேம்ஸ் அமல்ராஜ், இந்து, இஸ்லாமிய நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.
இந்தத் திருவிழா வருகிற 25- ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியாக 24 -ஆம் தேதி திருத்தோ் பவனி நடைபெறும். 25 -ஆம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.