மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியா் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம், எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எமனேசுவரம் ஜீவாநகா் பகுதியில் அரசின் முன்மாதிரிப் பள்ளியாக அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக எஸ்.அருள்ராஜன் பணியாற்றி வருகிறாா்.
பள்ளியில் 8, 9, 10-ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்திய இவா், மாணவிகளிடம் பாலியல் தொடா்பான தகவல்களைத் தெரிவித்து, அவா்களுக்கு மனதளவில் பாலியல் தொந்தரவை ஏற்படுத்தி வந்ததாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா் பள்ளித் தலைமையாசியரிடம் கூறியதையடுத்து, அவா் பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், ஆசிரியா் எஸ்.அருள்ராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.