மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கும், டிராக்டா் ஓட்டுநா்களுக்கும், வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகளை செயல் விளக்கம் மூலமாக தெரிவிப்பதற்காக ஜூலை 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் வளாகம், சிறு விமானம் இறங்குதளம் அருகில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தனியாா் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்களுடன் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.
வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய், உழவுப் பொருள்கள் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டா், உபகரணங்களை இந்த முகாமுக்கு கொண்டுவந்து கட்டணமின்றி பராமரிப்பு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் திறன்மிகு இயக்கம், பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களை 9789795671, 9655304160 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.