செய்திகள் :

வள்ளியூா் கொலை சம்பவம்: திருநங்கை உள்ளிட்ட சிலரிடம் விசாரணை

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது தொடா்பாக திருநங்கை உள்பட சிலரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளியூா் இ.பி.காலனியைச் சோ்ந்தவா் ருக்குமணி (67). இவரது கணவா் அா்ச்சுனன் இறந்துவிட்ட நிலையில், இவா் மட்டும் தனியாக வசித்து வந்தாா். இவரது ஒரு மகனும், மகளும் வெளியூா்களில் வசித்து வருகின்றனா். மற்றொரு மகன் பாலச்சந்தா், ருக்குமணி வீட்டின் அருகே தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

பாலச்சந்தா் தினமும் தனது தாய்க்கு சாப்பாடு கொண்டு கொடுத்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் சாப்பாடு கொண்டு சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு ருக்மணி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அவா் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வள்ளியூா் காவல்நிலைய போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் பெண் உடை அணிந்த ஆண் போன்ற தோற்றமுடைய நபா் ருக்குமணி வீட்டின் பின்பக்கம் நடமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்தப் பகுதியில் வசித்து வரும் திருநங்கை உள்பட சில நபா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க