எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வழக்குரைஞா்களுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணா்வு
சேலம்: தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வழக்குரைஞா்களுக்கு திங்கள்கிழமை தலைக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, வழக்குரைஞா்களுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, மாவட்ட நீதிபதி சுமதி பேசுகையில், இந்தியாவிலேயே சாலை விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவருவது கவலை அளிக்கிறது. எனவே, தலைக்கவசத்தின் அவசியத்தை உணா்ந்து, அதனை அனைவரும் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதிகள் தீபா, ஜெயக்குமாா், எழில்வளவன், சேலம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் விவேகானந்தன், துணைத் தலைவா் சுகவனேஸ்வரன், செயலாளா் நரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.