செய்திகள் :

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறிவுக் களஞ்சியமாக விளங்கினாலும், தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாகப் பராமரிப்பின்றி விடப்பட்ட இந்தக் கட்டடம், மேற்கூரை உதிர்ந்து, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மின் வயர்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், மின்சார விபத்துகளை ஏற்படுத்தும் அபாயகரமான சூழலில் உள்ளது.

மழைக்காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர் ஒழுகுவதால், வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனையாளர்களின் கட்டுரைகள், ஆன்மிகம், சமையல் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்புமிக்க புத்தகங்கள் நனைந்து சேதமடைகின்றன.

பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தப் புத்தகங்கள், பழைய காகிதக் கடையில் குவிப்பது போல மூலைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

புதிதாக வாங்கப்பட்ட நூலகப் பொருட்களும் ஆங்காங்கே குவிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன. கட்டடத்தின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுவதாலும், சுவர்களில் விரிசல்கள் பெருமளவில் உள்ளதாலும், இந்நூலகத்திற்கு வரும் வாசகர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

குறிப்பாக TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், இங்கு பயனுள்ள புத்தகங்கள் இருந்தும், இந்த மோசமான சூழல் காரணமாகப் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் கட்டடத்தை அவ்வப்போது பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டதே இத்தகைய நிலைக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நூலகத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் இந்த அறிவுக் களஞ்சியத்தை முற்றிலும் இழக்க‌ நேரிடும். எனவே, கட்டடத்தை உடனடியாகச் சீரமைக்கவோ அல்லது நவீன வசதிகளுடன் புதிய நூலகக் கட்டடத்தைக் கட்டித் தரவேண்டும் என அரசுக்கு உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, "நாங்கள் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளோம், அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்" என்றனர்.

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.மத்திய அரசு தரப்பிலிருந... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க

வங்கதேச விமான விபத்து: `தீயில் எரிந்து கொண்டிருந்தனர்; கல்லாக...'- நேரில் பார்த்த ஆசிரியர் வேதனை!

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் -... மேலும் பார்க்க