செய்திகள் :

ஏமன் கொலை வழக்கு: நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தா? - வெளியாகும் தகவலின் பின்னணி என்ன?

post image

ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மரண தண்டனைக்குள்ளான கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, ஜூலை 16-ம் தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்தது.

மத்திய அரசு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற முடியவில்லை.

நிமிஷா பிரியா வழக்கு
நிமிஷா பிரியா வழக்கு

பின்னர், கேரளாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் என்பவர் இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டி ஈரானின் உலகப் புகழ்பெற்ற சூஃபி அறிஞர் ஹபீப் உமர் பின் ஹஃபீஸை தொடர்புகொள்ள, அவர் தரப்பினர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் ஏமன் ஜனாதிபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் முடிவில் நிமிஷா பிரியா மரண தண்டனை தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

அதைத்தொடர்ந்து குறித்து கடந்த 10 நாள்களாக இதில் பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதில் பேச்சுவார்த்தை நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால், நிமிஷா பிரியா விரைவில் இந்திய அழைத்து வரப்படுவார் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

"குரூப் 4 தேர்வில் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை; 3 மாதங்களில்..." - TNPSC விளக்கம்!

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்... மேலும் பார்க்க

Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: "நானும் கலெக்டர் ஆவேன்" - கனவைச் சொன்ன சிறுமி; நெகிழ வைத்த கலெக்டர்; என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மணியம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி திஷியா(8). இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறோம்.பெற்றோரை இழந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள்; தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 680 பட்டாசுத் தொழிற்சாலைகள், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவின் கீழ் 400 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 1080 பட்டாசு... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இடிந்து விழும் நிலையில் நூலகம்; சேதமடையும் புத்தகங்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட உதயந்தேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம், 13,500 வாசகர்களுடனும், காலை மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் அறி... மேலும் பார்க்க

வங்கதேச விமான விபத்து: `தீயில் எரிந்து கொண்டிருந்தனர்; கல்லாக...'- நேரில் பார்த்த ஆசிரியர் வேதனை!

நேற்று (ஜூலை 21) பிற்பகல் 1 முதல் 2 மணி அளவில் நடந்த வங்கதேச ராணுவ விமான விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் -... மேலும் பார்க்க