‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
Pawan: பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அனுமதி; கூட்ட நெரிசல் ஆபத்து; வெடிக்கும் சர்ச்சைகள்!
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த பவன் கல்யாண், அரசியலில் காலடி எடுத்து வைத்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
சினிமாவில் இருந்து ஓய்வு பெறாமல் துணை முதல்வராக இருந்துகொண்டே 'Hari Hara Veera Mallu' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுவே பவன் மக்கள் பணியில் இல்லை என்ற விமர்சனத்தை கிளப்பியது. இப்படம் இந்த வாரம் வியாழக்கிழமை ஜுலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பாஜக-வின் அரசியலை பேசிவரும் பவன் கல்யாண் இந்து மதத்தைக் காப்பதற்காகப் போராடும் இக்கதையில் நடித்திருக்கிறார்.
கதைக்களம்
இதன் செய்தியாளர் சந்திப்பில், "இந்தப் படத்தில் விஜயநகரப் பேரரசின் பெருமையைப் பற்றிப் பேசவில்லை. ஔரங்கசீப்பின் தீய செயல்களைப் பற்றியும் பேசவில்லை. ஆனால், அந்தக் காலத்தில் இந்துவாக வாழ வேண்டுமென்றால் வரி கட்ட வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட காலத்தில், சத்ரபதி சிவாஜி துணிச்சலாகப் போராடினார். இப்படத்தில் நான் நடித்திருக்கும் ஹரி ஹர வீரமல்லு இந்து மதத்திற்காகப் போராடிய ஒரு கற்பனைக் கதாபாத்திரம்" என்று பேசியிருக்கிறார்.

ரூ.700 வரை விற்கும் டிக்கெட் விலை
இப்போது பிரச்னை என்னவென்றால் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தை நாளான ஜூலை 23ஆம் தேதி (புதன் கிழமை) நாளை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. இதற்கான டிக்கெட் விலை ரூ.700 முதல் விற்கப்படுகின்றன.
இத்திரைப்படம் வெளியாகும் நாள்களில் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் சாதாரணமாகவே டிக்கெட் விலை சிங்கிள் ஸ்கிரீனில் ரூ.200 முதல் ரூ. 300 வரையிலும்... மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.300 முதல் ரூ.700 வரையிலும் விற்கப்படுகின்றன.
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' பிரீமியர் ஷோ கூட்ட நெரிசல் விபத்தை நினைவுபடுத்தும் பவன் கல்யாணின் 'Hari Hara Veera Mallu'
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததாலும், அங்கு அல்லு அர்ஜுன் சென்றதாலும் கூட்ட நெரிசல் தீவிரமாக ஏற்பட்டு பலரும் காயமடைந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அக்கூட்டநெரிசலில் மனைவி ரேவதி (39), மகன் தேஜா(9), மகளுடன் (7) வந்த பாஸ்கர் குடும்பம் மாட்டிக் கொண்டு ரேவதி உயரிழந்த சம்பவமும், சிறுவன் தேஜா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்து கவலைக்கிடமான சம்பவமும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவமும், பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "இனி திரைப்படங்களின் பிரீமியர் ஷோக்களுக்கு அனுமதி இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
பவன் கல்யாணுக்கு இந்த இரண்டு மாநிலத்திலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறது. போதாக் குறைக்கு இப்போது பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வராக அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
பவன் கல்யாண் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும், பவன் கல்யாணின் அரசியல் பட்டாளமும் குவியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ரூ 700 வரையிலான அதிக டிக்கெட் விலை விற்பனையும், கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் ஆபத்து கொண்ட பிரீமியர் ஷோவாலும் பெரும் சர்ச்சைகளை இப்போதே கிளப்பத் தொடங்கியிருக்கிறது.
'புஷ்பா 2' கூட்டநெரிசல் விபத்து போல் இந்த 'Hari Hara Veera Mallu' பிரீமியர் ஷோவிலும் எந்தவொரு கூட்ட நெரிசல் விபத்தும், சர்ச்சைகளும் ஏற்பட்டுவிடாமல் முன் எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுத் தொடங்கியிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs