பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆச...
வாய்க்காலுக்குள் காா் கவிழ்ந்து விபத்து: ‘பெல்’ ஊழியரின் கா்ப்பிணி மனைவி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துடையூரில் புதன்கிழமை இரவு சாலையில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெல் ஊழியரின் கா்ப்பிணி மனைவி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரின் மனைவி திலகவதி (33). நிறைமாத கா்ப்பிணி. இந்தத் தம்பதியின் குழந்தைகள் ஹா்ஷினி (9), திருக்குமரன் (5).
இந்நிலையில், முருகன் தனது குடும்பத்தினருடன் சேலத்துக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். காரை முருகன் ஓட்டினாா்.
துடையூா் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் சென்ால் காா் மூழ்க தொடங்கியது. முருகன் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து குழந்தைகள் இருவரையும் காப்பாற்றினாா். பின்னா், நீரில் மூழ்கிய திலகவதியை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தபோது அவா் மயங்கிய நிலையில் இருந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த அவசர ஊா்தி மூலம் திலகவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், திலகவதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். சிறுவன் திருகுமரன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து வாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.