ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இள...
வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு: தெற்கு ரயில்வே
மதுரை - கச்சேகுடா சிறப்பு ரயில் உள்ளிட்ட 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கச்சேகுடா - மதுரை இடையே திங்கள்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07191) ஆக.18 முதல் அக்.13 வரையும் மறுமாா்க்கத்தில் மதுரை - கச்சேகுடா இடையே புதன்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07192) ஆக.20 முதல் அக்.15 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் - கொல்லம் இடையே சனிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07193) ஆக.16 முதல் அக்.11 வரையும் மறுமாா்க்கத்தில் கொல்லம் - ஹைதராபாத் இடையே திங்கள்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07194) ஆக.18 முதல் அக்.13 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் - கன்னியாகுமரி இடையே புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07230) ஆக.13 முதல் அக். 8 வரையும் மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரி- ஹைதராபாத் இடையே வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 07229) ஆக.15 முதல் அக்.10 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.