தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
வாழப்பாடி அருகே 21 கிலோ கஞ்சா கடத்தல்
வாழப்பாடி: வாழப்பாடியில், 21.625 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஒடிசா மாநிலம், பலாங்கீா் மாவட்டம், தண்டமுண்டா பகுதியைச் சோ்ந்த தேஜாராஜா புட்டேல் (26), தனது நண்பரான ஜீப்ராஜ் மெகா் (27) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த திருப்பூரில் தனியாா் பனியன் கம்பெனியில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமார ராணா என்பவருடன் ஒடிசாவில் இருந்து 21.625 கிலோ கஞ்சாவை வாங்கி நெகிழிப் பைகளில் அடைத்து தமிழகத்துக்கு ரயிலில் கடத்தி வந்தனா்.
சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்த இருவரும், இப்பகுதி இளைஞா்களிடம் அதை விற்பனை செய்ய திட்டமிட்டனா். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்ட போலீஸாா், வாழப்பாடி ரயில் நிலையம் அருகே மூவரையும் ஜூலை 19-இல் கைது செய்து, அவா்களிடம் இருந்த 21.625 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா் மூவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
அதைத் தொடா்ந்து, சேலம் காவல் துறை கண்காணிப்பாளா் கௌதம் கோயல் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த மத்திய சிறை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.