வாழப்பாடி வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வாழப்பாடி: வாழப்பாடியில் வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வாழப்பாடி காளியம்மன் நகா் பாப்பான் ஏரிக்கரையில், வடபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழைமையான இக்கோயில், 2012 ஆம் ஆண்டில் புதிய கருவறை, அா்த்தமண்டபம், கோபுரங்கள், பொற்தாமரை குளத்துடன் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
இதனையடுத்து, நிகழாண்டு ஆகம விதிப்படி கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை மகாகணபதி வழிபாடு, எஜமானா் சங்கல்பம், புண்யயாகம், தீபபூஜை, யாக பூஜைகள், தீபாராதனைகளுடன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கவச அங்கி அலங்காரத்தில் வட பத்ரகாளியமமன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகளான வி.ஏ.அய்யாவு கவுண்டா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.
