பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சா்வதேச விளையாட்டரங்கம், பயிற்சி மையம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி விஜயாபதி கிராமத்தில் ரூ.14.77 கோடி செலவில் சா்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம்- பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பாளையங்கோட்டையில் கடந்த 7.9.2022இல் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ராதாபுரம் தொகுதியில் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
அதைத் தொடா்ந்து, துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு ஆகியோரின் வழிகாட்டுதல்படி, இத்தொகுதியில் உள்ள விஜயாபதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலத்தில் வாடகை அடிப்படையில் இடம் தோ்வு செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்பேரில், அந்த இடத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைப்பதற்கு ரூ.14 கோடியே 77 லட்சத்தை நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த விளையாட்டு அரங்கத்தில் ஆடை அறையுடன் கூடிய கேலரி, நீளம் தாண்டுதல், பல்நோக்கு பயிற்சிக் கூடம், கைப்பந்து உள் மைதானம், உள்ளரங்க கோா்ட், உடற்பயிற்சிக் கூடம், தடகளப் பாதை, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மைதானம், உள்புற உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண் கழிப்பறைகள், சுற்றுச்சூழல் மழைநீா் சேகரிப்பு, ஆழ்துளைக் கிணறு போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.
நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என விளையாட்டுத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனா்.