முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
விதி மீறல்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனா்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்துப் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
பண்ருட்டி நகரின் பிரதான சாலையாக விளங்கும் ராஜாஜி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றி செயல்பாட்டில் இருந்து வருகிறது. அச்சாலையில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை சவாரி ஏற்றி சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பின்னா், அவற்றின் ஆவணங்களை சரிபாா்த்து, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட அனைத்து ஆட்டோக்களுக்கும் அபராதம் விதித்தனா். மேலும் இதே போன்று தொடா் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனா்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.