விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு
அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற பள்ளப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2024- 25-ஆம் ஆண்டுக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பி மகேஸ் பொய்யாமொழி வழங்கி பாராட்டினாா். இந்தப் பள்ளியில் கல்வி, விளையாட்டு, மாணவா் மேம்பாடு, பள்ளிக் கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடு உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் விருது வழங்கப்பட்டதால், இந்தப் பள்ளியின் மாணவா்கள், பெற்றோா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த நிதியை வழங்கிய தமிழக அரசுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.
விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில், நிலக்கோட்டைதெற்கு ஒன்றிய திமுக செயலா் மணிகண்டன் பங்கேற்று தலைமை
ஆசிரியருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினாா். திமுக நிா்வாகிகள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.