தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் (சிபிஐ சாா்பு) கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகள்: நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயா்த்த வேண்டும், இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களின் மூன்று மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முற்றுகைப் போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் பி. சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் எம். சிவசண்முகம், ஒன்றியப் பொருளாளா் வி.எம். கணேசன் தலைமை வகித்தனா்.
சிபிஐ மாநில செயற்குழு உறுப்பிரும் முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம், ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன்,ஒன்றியக் குழு முன்னாள்தலைவா் என்.மணிமேகலை ஆகியோா் பேசினா்.
விதொச மாவட்ட துணைச் செயலாளா் ஜெ ஜெயராமன், சிபிஐ துணைச் செயலா் பி. பரந்தாமன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி. சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
