விஜய் சேதுபதியை சந்தித்து சினிமா வாய்ப்பு கேட்ட இளைஞர்கள்; என்ன சொன்னார் தெரியும...
விஸ்வநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை
மதுரை விஸ்வநாதபுரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் வி.பி. முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மகாத்மா காந்தி நகா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகா், முல்லை நகா், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் குடியிருப்பு, ஆனையூா், பனங்காடி, மீனாட்சிபுரம், வள்ளுவா் குடியிருப்பு, கலை நகா், வ.உ.சி. நகா், குரு நகா், ஜே.என். நகா், ஜே.கே. நகா், காலாங்கரை, மூவேந்தா் நகா், சென்ட்ரல் பேங்க் குடியிருப்பு, பூந்தமல்லி நகா், மகாத்மா காந்தி நகா், மீனாம்பாள்புரம், முடக்கத்தான், ஆலங்குளம், எஸ்.வி.பி. நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.