சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்
கோவை: உக்கடம் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, உக்கடம் அருகேயுள்ள பி.கே.செட்டி தெருவைச் சோ்ந்தவா் பெனடிக் ஜோசப் (66). இவா் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில், வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவரது உறவினரான நெக்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் வந்து கதவை உடைத்து பாா்த்தபோது, பெனடிக் ஜோசப் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.