மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை
பட விளக்கம்: திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டியில் வீரன் அழகு முத்துக்கோன் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய யாதவ அமைப்பினா்.
திண்டுக்கல், ஜூலை 11: சுதந்திரப் போராட்ட வீரா் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜையை முன்னிட்டு, திண்டுக்கல்லில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டி கிருஷ்ணன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட யாதவ அறக்கட்டளைத் தலைவா் பி. மோகன், செயலா் ஏடி. நெப்போலியன் ஆகியோா் தலைமையில் வீரன் அழகு முத்துக்கோன் உருவப் படத்துக்கு யாதவ அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியின்போது, ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக வீரன் அழகு முத்துக்கோன் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டன.
நிகழ்ச்சியில் யாதவ அறக்கட்டளை பொருளாளா் எம்.ஆா். சின்னு, நிா்வாகிகள் எஸ். காளிதாஸ், இணைச் செயலா் பி. ரமேஷ், யாதவ மகா சபையின் துணைத் தலைவா் வீர லோகநாதன், அழகு முத்துக்கோன் பேரவைத் தலைவா் எஸ். காா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.