பாலாகோட் தாக்குதலுக்கு நேர் எதிரான சிந்தூர் தாக்குதல்! ஏன்? எப்படி?
வீரவநல்லூா் அருகே சூறைக்காற்றில் சாய்ந்த மரங்கள்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
வீரவநல்லூா், தெற்கு வீரவநல்லூா், மலையான்குளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மலையான்குளம் அருகே மாதுடையாா்குளம் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன; மின் கம்பங்கள் சாய்ந்து வயா்கள் அறுந்து விழுந்ததால், இக்கிராமத்தில் 15 மணி நேரத்துக்கு மேலாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமமடைந்தனா்.

பிரதான சாலையில் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை சீரமைப்புப் பணி மேற்கொண்டு, மின் விநியோகத்தை சரிசெய்தனா். சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது.