மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
வூஹான் பொதுமுடக்கம் தொடங்கி 5 ஆண்டுகள்.. தொடரும் சவால்கள்
பெய்ஜிங்: கரோனா என்ற பெருந்தொற்று உலகையே ஒரு உலுக்கு உலுக்கியெடுத்துச் சென்றுவிட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில், கரோனா பொதுமுடக்கம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
ஆனாலும், சீனா சந்தித்த இழப்புகளை சரிகட்ட இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான், வூஹான் மாகாணத்துக்கு மக்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். வெளி நபர்களுக்கு கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.