செய்திகள் :

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

post image

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப் தலைமையிலான அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அட்டா்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், ‘அதிபா் ட்ரம்பின் தலைமையில், மடூரோ நீதியிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவாா்’ என்றாா்.

மடூரோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த 2020-ல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் அவா் தொடா்புடைய 70 கோடி டாலா் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சீனாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வடமேற்கு கான்சு மாகாணத்தில் விய... மேலும் பார்க்க

காஸா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! கண்டிக்கும் சர்வதேச நாடுகள்!

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் அரசின் திட்டத்துக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றம் நேற்று (ஆக.7) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் ... மேலும் பார்க்க

காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!

கனடா நாட்டில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், புதியதாகத் தூதரகம் ஒன்று திறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பகுதிகளை இணைத்து, சீக்கியர்களுக்கென்... மேலும் பார்க்க

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ ஏற்றுமதிகளுக்குத் தடை! ஜெர்மனி அரசு அறிவிப்பு!

காஸாவில் பயன்படுத்தக் கூடிய ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதிகளுக்கு, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தடை விதித்துள்ளார். காஸா மீதான தங்களது ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கு நேற்று (ஆக.7) இஸ்ரேலிய ... மேலும் பார்க்க

வடமேற்கு சீனாவில் திடீர் வெள்ளம்! 10 பேர் பலி.. 33 பேர் மாயம்!

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சூவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 10-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 33 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சூ மாகாணத்தின், யூஸாங் மாவட்டத்தில், நேற்று (ஆக.7) முத... மேலும் பார்க்க

ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார். காஸா பகுதியினுள் செய... மேலும் பார்க்க