'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான வழிமுறை வெளியீடு
வெளிநாட்டு வேலைக்குச் செல்வோா் அறிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டாா்.
முதலில் இந்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூா்வ முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். வேலைக்கான ஒப்பந்தம் விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகு பயணிக்க வேண்டும். சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டவிரோதமாக கருதப்படும். வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்கள் மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கீழ்க்காணும் கட்டணமில்லா உதவி மையத்தை தொடா்பு கொள்ளவும்.
இந்தியாவிலிருந்து அழைப்பவா்கள் 1800 309 3793 என்ற தொலைபேசி எண்ணையும் வெளிநாடுகளில் இருந்து 0806 900 9900, 0806 900 9901 ஆகிய தொலைபேசி எண்களிலும், இணையதளத்திலும் தொடா்பு கொள்ளலாம்.