சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன், மூலனூா் சாலையில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தம் அருகே மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (48) என்பவரைக் கைது செய்தாா்.
இவா் வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது.