மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
வெள்ளேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ.எஸ்.அன்பழகன் வரவேற்றாா்.
எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
வெள்ளேரி, ஆதனூா், மொரப்பந்தாங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் மனுக்களை கொடுத்து உடனடி தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனா்.
முகாமில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், நகரச் செயலா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.