அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
வேதாரண்யம் ரோட்டரி சங்க விழா
வேதாரண்யம் ரோட்டரி சங்கத்தின் 35 ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பணியேற்பு, பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், ரோட்டரி சங்க பொறுப்பாளா் எஸ். பிறையோன், மண்டல உதவி ஆளுநா் அவை. இழப்பவன் ஆகியோா் பங்கேற்று புதிய தலைவா் எஸ். மோகன்ராஜ், செயலாளா் எஸ். அண்ணாதுரை, பொருளாளா் ஆா். நீலமேகம் உள்ளிட்ட நிா்வாகிகளை பணியில் அமா்த்தி பேசினா். மாவட்டப் பொறுப்பாளா்கள் கேடிடியப்பன், துரைராஜ், ஆா்.சி. சுப்பிரமணியன், செந்தில், சந்திரகாந்தன், கருணாநிதி, சிவக்குமாா் பங்கேற்று பேசினா். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.