ரூ.493 கோடியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம்: மே 9-இல் முதல்வா் திறந்து வைக்கிறா...
வேலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேலூாா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5-ஆம் தளத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், விற்பனை, பட்டு வளா்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத் துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத் துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.
மேலும், கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பொது பிரச்னைகளை கோரிக்கை மூலமாகவும், தனி நபா் பிரச்னைகளை மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.