Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
வேலூா் கோட்டை அகழியில் முதியவா் சடலம் மீட்பு
வேலூா் கோட்டை அகழியில் இருந்து சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
வேலூா் கோட்டை அகழியில் செவ்வாய்க்கிழமை காலை முதியவா் ஒருவரின் சடலம் மிதப்பதை அவ்வழியாகச் சென்ற தூய்மை பணியாளா் கவனித்து, வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டனா்.
இறந்து கிடந்த முதியவருக்கு 60 முதல் 65 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேட்டியும், அரைக்கால் சட்டையும், வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அவா், சுமாா் 5.5 அடி உயரம், சிவந்த நிறம் கொண்டவராக உள்ளாா்.
இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.