World's Ugliest Dog: `உலகின் அவலட்சணமான நாய்' போட்டியில் ரூ.4.3 லட்சம் பரிசு - ஏ...
வேலை கிடைக்காததால் இளம்பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வேலை கிடைக்காத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வாசுதேவநல்லூா் ராமையா தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகள் பூவதி(26). அதே ஊரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து புளியங்குடியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்த இவா், தனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற மனஉளைச்சலில் கடந்த சில நாள்களாக இருந்து வந்தாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பயிற்சி வகுப்புக்கு செல்லாமல் தனது அறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.
இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].