கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
வேளாண் பல்கலை.யில் தோட்டக்கலைத் திருவிழா
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ஹாா்ட்டி உத்சவ் 2025’ என்ற பெயரில் தோட்டக்கலைத் திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவை துணைவேந்தா் (பொறுப்பு) தமிழ்வேந்தன் தொடங்கிவைத்தாா். தோட்டக்கலைத் துறை முதன்மையா் க.வெங்கடேசன், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி முதன்மை அலுவலா் அனிஷா ராணி, ஆதிபராசக்தி தோட்டக்கலைக் கல்லூரி முதல்வா் கோ.உமாபதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் போ.அகஸ்டின் ஜெராா்ட் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில், பெரியகுளம், திருச்சி, பையூா், கலவை, செம்பட்டி ஆகிய தோட்டக்கலைக் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தோட்டக்கலை மாணவா்களுக்கு விநாடி- வினா, நில வரைபடம் தயாரித்தல், நடனம் உள்ளிட்ட 21 போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், தோட்டக்கலை மாதிரிகளுடன் கூடிய கண்காட்சி, ஒருங்கிணைந்த செங்குத்துத் தோட்ட மாதிரிகள், நீா்த்தாவர அமைப்பு, வீடு, மாடித்தோட்ட மாதிரிகள், நீா்ப்பாசன மாதிரிகள் போன்றவற்றுடன் கூடிய கண்காட்சியும் நடைபெற்றது.