தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கோவை அருகே பணப் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூா் ஜீவபாதையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி சுஜாதா. ரவிச்சந்திரன் கடந்த சில நாள்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். இதனால், கல்லூரியில் படிக்கும் அவரது மகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால், மன வேதனையில் இருந்த ரவிச்சந்திரன் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.