இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர...
ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம்
திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
இப்பள்ளியில் 411 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அனைவரும் முதல் நிலையில் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளி சராசரி மதிப்பெண் 86 சதவீதம். மாணவி வைத்தீஸ்வரி 596 மதிப்பெண்கள் பெற்று கணக்குப்பதிவியல்,
வணிக கணிதம், பொருளியல், வணிகவியல் ஆகிய 4 பாடங்களில் 100/100 பெற்றாா். மாணவா் அஸ்வின் 593 பெற்று, (வேதியியல், கணினி அறிவியல், கணிதம்) 3 பாடங்களில் 100/100, மாணவி தியானா 593 பெற்று, (கணிதம், வேதியியல்) 2 பாடங்களில் 100/100, மாணவி மகஸ்ரீ 590 பெற்று (வேதியியல், கணினி அறிவியல்) 2 பாடங்களில் 100/100, ரோகித் 590 பெற்று, (கணினி அறிவியல்) பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். 81 போ் பாட வாரியாக 100/100 பெற்று, திருவள்ளூா் அளவில் சிறப்பிடமும், 66 மாணவா்கள் 99/100, 139 மாணவா்கள் 500/600 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், அதற்கு உழைத்த ஆசிரியா்களை பள்ளித் தாளாளா் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநா் பரணிதரன், பள்ளி முதல்வா் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வா் கவிதா கந்தசாமி ஆகியோா் பாராட்டி இனிப்பு வழங்கினா்.